2025 மே 17, சனிக்கிழமை

இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி

Freelancer   / 2023 ஒக்டோபர் 21 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

லக்னோவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கமைய இந்த உலக கிண்ண தொடரில் இலங்கை அணி தமது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .