Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, கராச்சியில் நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்த நிலையில், இப்போட்டிக்கான ஆடுகளமும் துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதகமானதாகவே காணப்படுகின்ற நிலையில் இப்போட்டியிலும் தீர்க்கமான முடிவு கிடைக்கப் பெறுமா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது.
இலங்கையணியைப் பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித காயமடைந்துள்ள நிலையில் அணியில் நிச்சயம் மாற்றமேற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்ற நிலையில், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சுழற்பந்துவீச்சாளர் லசித் அம்புல்தெனிய அவரை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு எந்த மாற்றமும் இலங்கையணியில் இருக்காது என்றபோதும், குழாமுக்கு வெளியே குசல் பெரேரா காணப்படுகின்ற நிலையில் முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஓட்டங்களைப் பெற்று தனதிடத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்.
குசல் மென்டிஸும் முதலாவது டெஸ்டில் ஓட்டங்களைப் பெற்றிருக்காதபோதும் திறமையான இளம்வீரர் என்ற வகையில் அவருக்கு மேலதிக வாய்ப்புகள் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், முதலாவது டெஸ்டில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடியிருந்த நிலையில், இப்போட்டியில் மொஹமட் அப்பாஸை யசீர் ஷா பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில், யசீர் ஷாவின் அண்மைய கால பந்துவீச்சு பெறுபேறுகள் மோசமாகக் காணப்படுகின்ற நிலையில், மொஹமட் அப்பாஸை அறிமுகவீரர் கஷிஃவ் பட்டி பிரதியிட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
இதேவேளை, பாகிஸ்தான் குழாமில் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஓட்டங்களைக் குவித்து வரும் ஃபவட் அலாம் காணப்படுகின்றநிலையில், முதலாவது டெஸ்ட்டுக்கான அணியில் இடம்பெற்ற ஹரீஸ் சொஹைல் ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையிலுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025