Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 22 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்த புதிய தகவல்களை பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் நேற்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முன்னர் முறையிடத் தவறியவர்கள் முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியுள்ள நிலையிலேயே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வழமையாக மோசடிகள் குறித்து எந்த அணுகல்களையும் சம்பவங்களையும் அல்லது தகவல்களையும் தாமதமில்லாமல் முழுமையாக வழங்கத் தவறும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் வரையில் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுமென்ற நிலையில் குறித்த மன்னிப்புக் காலத்தில் நபரொருவரால் வழங்கப்படும் தகவல்களுக்கு, அவர் அதை முன்னர் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்படாதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள்ள அலெக்ஸ் மார்ஷல், 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தை தாம் அணுகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையோனோர் முன்வந்தமையால் தான் ஊக்கமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையால், மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் கீழ் இலங்கையணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான சனத் ஜெயசூரிய, முன்னாள் வீரர்களான நுவான் சொய்ஸா, டில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
6 hours ago
7 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
03 Oct 2025