2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை வீராங்கனை குமுது ப்ரியன்காவுக்கு ஏமாற்றம்

Editorial   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவின் 7ஆம் நாளான நேற்று (31)காலை நடைபெற்ற பெண்களுக்கான ரீ46/47 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி குமுது ப்ரியன்கா திசாநாயக்க தகுதிகாண் சுற்றுடன் வெளியேறினார்.

இப் போட்டிக்கான முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய குமுது ப்ரியன்கா திசாநாயக்க அப் போட்டியை 13.31 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

இப் போட்டியில் வெனிசுவேலாவின் லிஸ்பெலி மரினா வெரா அண்ட்ராடே (12.14 செக்.) முதலாம் இடத்தையும் ஐக்கிய அமெரிக்காவின் டேஜா யங் (12.26 செக்.) இரண்டாம் இடத்தையும் சீனாவின் லூ லி (12.80 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்று நேரடியாக இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ப்ரிட்டினி மேசன் (12.07 செக்.) முதலாம் இடத்தையும் போலந்தின் ஆலியா ஜெரோமின் (12.19 செக்.) இரண்டாம் இடத்தையும் சேர்பியாவின் சஸ்கா சொகோலோவ் (12.43 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்று நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இரண்டாவது தகுதிகாணில் அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த ஈக்வடோரின் கியாரா ரொட்றிகஸ் (12.54 செக்.), ரஷ்ய பராலிம்பிக் குழுவின் அலெக்ஸாண்ட்ரா மொகுசாயா (12.64 செக்.) ஆகியோரும் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

பெண்களுக்கான ரி46/47 பிரிவு 100 மீற்றர் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.48 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. – (என்.வீ.ஏ.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X