2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைக் குழாமில் அவிஷ்க, தனஞ்சய, வன்டர்சே

Mithuna   / 2024 ஜனவரி 04 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் அவிஷ்க பெர்ணாண்டோ, ஜெஃப்ரி வன்டர்சே, அகில தனஞ்சய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அவிஷ்க, வன்டர்சே ஆகியோர் ஓராண்டுக்குப் பின்னரும், தனஞ்சய மூன்றாண்டுகளுக்குப் பின்னரும் இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான குழாமில் இடம்பெற்ற குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மதீஷ பத்திரண, லஹிரு குமார, கசுன் ராஜித, சாமிக கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் இக்குழாமில் இடம்பெறவில்லை.

இவர்களுக்குப் பதிலாக அவிஷ்க, வன்டர்சே, தனஞ்சயவுடன், வனிடு ஹஸரங்க, பிரமோத் மதுஷன், ஜனித் லியனகே, நுவனிடு பெர்ணாண்டோ, சஹான் ஆராச்சிகே ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: குசல் மென்டிஸ் (அணித்தலைவர்), சரித் அசலங்க, பதும் நிஸங்க, அவிஷ்க பெர்ணாண்டோ, சதீர சமரவிக்கிரம, சஹான் ஆராச்சிகே, நுவனிடு பெர்ணாண்டோ, தசுன் ஷானக, ஜனித் லியனகே, மகேஷ் தீக்‌ஷன, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, டுனித் வெல்லலாகே, பிரமோத் மதுஷன், ஜெஃப்ரி வன்டர்சே, அகில தனஞ்சய, வனிடு ஹஸரங்க.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .