2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு அழைக்கப்பட்டார் வன்டர்சே

Editorial   / 2018 ஜூன் 24 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஜெவ்ரி வன்டர்சே, இலங்கைக் கிரிக்கெட் சபைக்கும் அவருக்குமிடையிலான ஒப்பந்தத்தை மீறியதையடுத்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவரிகையில், வன்டர்சேயும் இன்னும் மூன்று வீரர்களும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் முடிவடைந்த பின்னர் இரவு விடுதியொன்றுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வன்டர்சேயின் அறையில் அவர் மறுநாள் காலையில் காணப்படாததையடுத்து அணி நிர்வாகம் பொலிஸில் முறையிட்ட நிலையில், சில மணித்தியாலங்களின் பின்னர் ஹொட்டலுக்குத் திரும்பிய வன்டர்சே, மற்றைய வீரர்கள் தன்னை இரவு விடுதியில் தனியே விட்டு விட்டு ஹொட்டலுக்குத் திரும்பியதாகவும் அதன்பின்னர் தான் வழியைத் தவறவிட்டதாக அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .