Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தடகளத்தில் நான்கு தங்கப் பதக்கங்கள் இன்று கிடைத்திருந்தன.
பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டலில், போட்டித் தூரத்தை 13.68 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை லக்ஷிகா சுகந்தி பெற்றிருந்தார். போட்டித் தூரத்தை 14.13 செக்கன்களில் கடந்த இந்தியாவின் அபர்ணா றோய் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்த நிலையில், போட்டித் தூரத்தை 14.18 செக்கன்களில் கடந்து வெண்கலப் பதக்கத்தை இரேஷானி ராஜசிங்கே பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில், போட்டித் தூரத்தை 46.69 செக்கன்களில் கடந்து அருன தர்ஷன தங்கப் பதக்கத்தையும், 46.79 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து லக்மால் பிரியந்த வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில், 53.40 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து டிலிஷி குமாரசிங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்
இதேவேளை, பெண்களுக்கான முப்பாய்தலில் 13.29 மீற்றர் தூரம் பாய்ந்து ஹஷினி பிரபோதா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026