2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான தொடருக்கான குழாமிலிருந்து லூயிஸ், ஹெட்மயர் நீக்கம்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடற்றகுதிச் சோதனைகளில் தோல்வியடைந்ததையடுத்து, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எவின் லூயிஸ், துடுப்பாட்டவீரர் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்த சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் டரன் பிராவோ, சகலதுறைவீரர் றொவ்மன் பவல் மற்றும் காயத்திலிருந்து குணமடைந்த சகலதுறைவீரர் பேபியன் அலன் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.

குழாம்: பேபியன் அலன், சுனில் அம்பிறிஸ், டரன் பிராவோ, றொஸ்டன் சேஸ், ஷெல்டன் கோட்ரல், ஜேஸன் ஹோல்டர், ஷே ஹோப் (விக்கெட் காப்பாளர்), அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங், கீமோ போல், கெரான் பொலார்ட் (அணித்தலைவர்), நிக்கலஸ் பூரான், றொவ்மன் பவல், றொமாறியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .