Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தமது குழாமில் புறச்சுழற்பந்துவீச்சாளர் வில் சோமர்வில்லி, இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், மிற்செல் சான்ட்னெர், புறச்சுழற்பந்துவீச்சாளர் டொம் அஸ்டில் உள்ளடங்கலாக நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை நியூசிலாந்து பெயரிட்டுள்ளது.
அந்தவகையில், குழாமில் நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கொலின் டி கிரான்ட்ஹொம், ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி, நீல் வக்னர் ஆகியோரே வேகப்பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ஆக, உலகக் கிண்ணத்தின் நட்சத்திரங்களில் ஒருவரான லொக்கி பெர்கியூசன் தனது அறிமுகத்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, விக்கெட் காப்பாளர் பி.ஜெ வட்லிங்கை பிரதியிடக்கூடியவராக டொம் பிளன்டெல் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் 14ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் தொடங்கவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான ஆரம்பமாக இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இத்தொடர் அமையவுள்ளது.
குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொட் அஸ்டில், டொம் பிளன்டெல், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹொம், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ், அஜாஸ் பட்டேல், ஜீட் றாவல், வில் சோமர்வில்லி, மிற்செல் சான்ட்னெர், டி செளதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர். பி.ஜெ. வட்லிங்.
35 minute ago
42 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
46 minute ago
1 hours ago