2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் போராடுகிறது இங்கிலாந்து

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் இங்கிலாந்து போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து தமது முதலாவது இனிங்ஸில் இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களுடனும், ஜேக் லீச் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். முன்னதாக, சாம் கர்ரன் 48, கீட்டன் ஜெனிங்ஸ் 46, ஜொஸ் பட்லர் 38, அடில் ரஷீட் 35, ஜோ றூட் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், டில்ருவான் பெரேரா 4, சுரங்க லக்மால் 2, ரங்கன ஹேரத், அகில தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X