Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கிரிக்கெட் கொண்டுநடத்த ப்படும் விதம் தொடர்பில் தனது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து, அதன் விடயங்களில் தலையிட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சாதனையாளரும் முன்னாள் வீரருமான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், தற்போது அத்தப்பத்துவும் இணைந்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அத்தப்பத்துவிடம், இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்கள், தமது திறன்களை இலங்கையின் தற்போதைய அணிக்கு மீள வழங்குகிறார்களா எனக் கேட்ட போது, “எனக்காக மாத்திரம் நான் கதைக்கிறேன். தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. ஒருவரின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுவதற்கு நான் விரும்பவில்லை. மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டத்துடனும் எனது கிரிக்கெட்டை விளையாடியிருந்தேன். எனது ஓய்வை நான் மகிழ்ச்சியாகக் களிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
சரியான இடத்தில் பங்களிப்பு வழங்க முடியுமாக இருந்தால், அதைச் செய்ய முடியுமெனத் தெரிவித்த அவர், பிரபலத்தன்மையைப் பெறுவதற்காகச் செய்யப் போவதில்லையெனவும் தெரிவித்தார். அத்தோடு, தனது காலத்தைச் சேர்ந்த பல வீரர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையணியின் முன்னாள் தலைவராக மாத்திரமன்றி, தலைமைப் பயிற்றுநர், துடுப்பாட்டப் பயிற்றுநர் ஆகிய பதவிகளையும் வகித்திருந்த அத்தப்பத்துவின் கருத்து, இலங்கை கிரிக்கெட் விடயங்களிலிருந்து தள்ளியிருத்தல் என்ற, இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.
8 hours ago
8 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
03 Oct 2025