2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் வெற்றிக்கு 348 ஓட்டங்கள் தேவை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 02 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை வெற்றி பெறுவதற்கு இறுதி நாளில் 348 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

நான்காம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை, மேலும் எட்டு ஓட்டங்களைச் சேர்ப்பதற்கு அடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் கேமார் றோச்சிடம் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்றது. பத்தும் நிஸங்க 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்ந்தியத் தீவுகள், குறிப்பிட்ட இடைவெளியில் ஜோன் கம்பெல், ஜெர்மைன் பிளக்வூட்டை சுரங்க லக்மால், துஷ்மந்த சமீரவிடம் பறிகொடுத்தது.

எனினும், கைல் மேயர்ஸின் 55 ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் நகர்த்தியதுடன் அவர் லக்மாலிடம் வீழ்ந்தபோதும், அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டின் 85 ஓட்டங்களுடன் தமது முன்னிலையை அதிகரித்ததுடன், அவர் சமீரவிடம் வீழ்ந்தபோதும், ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காத 71 ஓட்டங்களோடு 4 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.

இந்நிலையில், 377 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவருகின்ற இலங்கை, நான்காம் நாள் முடிவில் தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .