2025 மே 17, சனிக்கிழமை

இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில்,
கெளகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை
தோற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, குசல் மென்டிஸின் 158
(87) ஓட்டங்களுடன் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப்
பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் நபி 4 மற்றும் முஜீப் உர் ரஹ்மான், பஸல்ஹக் பரூக்கி, நவீன்-
உல்-ஹக், ரஷீட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பின்னர் மழை காரணமாக 42 ஓவர்களில் 257 ஓட்டங்களென்ற வெற்றியிலக்கை நோக்கித்
துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 119 (92), ரஹ்மத் ஷாவின் 93
(82) ஓட்டங்களோடு 38.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில்
வெற்றியிலக்கையடைந்தது. கசுன் ராஜித ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதேவேளை, ஹைதரபாத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாகிஸ்தானை
அவுஸ்திரேலியா வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .