2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 29 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இத்தொடர் அடங்குவதோடு, முதலிடத்தில் அவுஸ்திரேலியாவும், நான்காமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரானது இரண்டு அணிகளின் நிலைகளில் தாக்கம் செலுத்துகிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பதும் நிஸங்க அணிக்குத் திரும்பவுள்ளதோடு, டெஸ்ட் போட்டிகளில் ஜெஃப்ரி வன்டர்சே அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியில் மிற்செல் ஸ்வப்ஸன் விளையாடுவதை அணித்தலைவர் பற் கமின்ஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் போட்டிக்கு முன்பாக ட்ரெவிஸ் ஹெட் எவ்வாறு இருக்கிறார் என்பதைப் பொருட்டு அவரும் அவர் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் கிளென் மக்ஸ்வெல்லும் களமிறங்குவர்.

இத்தொடரைப் பொறுத்த வரையில் மர்னுஸ் லபுஷைன், ட்ரெவிஸ் ஹெட், கமரொன் கிறீன், அலெக்ஸ் காரி ஆகியோர் எவ்வாறு லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மென்டிஸ் ஆகியோரை எதிர்கொள்கின்றனர் என்ற நிலையிலேயே தொடரின் போக்கு அமையவுள்ளது.

தவிர, இலங்கையணியின் சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோரிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .