2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையை வென்ற சிம்பாப்வே

Mithuna   / 2024 ஜனவரி 17 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை சிம்பாப்வே வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்க, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்கிரமவை வரிசையாக இழந்து 4.4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கவின் 69 (39), அஞ்சலோ மத்தியூஸின் ஆட்டமிழக்காத 66 (51) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே டில்ஷான் மதுஷங்க, மகேஷ் தீக்‌ஷன (2), துஷ்மந்த சமீரவிடம் (2) விக்கெட்டுகளை இழந்தபோதும் கிரேய்க் எர்வினின் 70 (54), லுக் ஜொங்வேயின் ஆட்டமிழக்காத 25 (12), கிளைவ் மடன்டேயின் ஆட்டமிழக்காத 15 (05) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 19.5 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஜொங்வே தெரிவானார்.

இரண்டு அணிகளுக்குமிடையிலான தீர்மானமிக்க மூன்றாவது போட்டியானது இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X