Shanmugan Murugavel / 2024 நவம்பர் 10 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை நியூசிலாந்து வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில், தம்புள்ளயில் இன்று (10) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, நுவான் துஷார (2), வனிது ஹசரங்க (4), மதீஷ பத்திரண (3), மகேஷ் தீக்ஷனவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் வில் யங்க் 30 (32), ஜொஷ் கிளார்க்சன் 24 (25), அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 19 (24) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 109 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக பதும் நிஸங்க 52 (51) ஓட்டங்களைப் பெற்றபோதும் சான்ட்னெர், லொக்கி பெர்கியூசன் (3), மிஷெல் பிறேஸ்வெல் (2), ஸகாரி போக்கிஸ், கிளென் பிலிப்ஸிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பெர்கியூசனும், 1-1 என சமநிலையான இத்தொடரின் நாயகனாக ஹசரங்கவும் தெரிவாகினர்.
8 minute ago
37 minute ago
46 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
46 minute ago
48 minute ago