2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஈ.எஃப்.எல் கிண்ணம்: அரையிறுதியில் ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதி பெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான காலிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றன. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையிலேயே பெறப்பட்டதுடன், பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் குயெஹி பெற்றிருந்தார்.

ஆர்சனல் சார்பாக வில்லியம் சலிபா, ஜூரியன் டிம்பர், றிக்கார்டோ கலபியோரி, மிகேல் மெரினோ, லியான்ட்ரோ ட்ரொஸார்ட், புகாயோ ஸாகா, டெக்லன் றைஸ், மார்டின் ஒடெகார்ட் ஆகியோர் பெனால்டிகளை கோல் கம்பத்துக்குள் உட் செலுத்தியிருந்தனர். பலஸ் சார்பாக ஜீன்-பிலிப் மடெடா, ஜஸ்டின் டெவென்னி, வில் ஹியூஸ், பொர்னா சொஸா, ஜெஃபெர்சன் லெர்மா, அடம் வார்டன், கிறிஸ்டியன்டஸ் உஷே ஆகியோர் பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில், மக்ஸென்ஸ் லக்ரொய்ஸின் உதையை ஆர்சனலின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகா தடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X