Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் தோற்றதைத் தொடர்ந்தே உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஏழு போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளை மாத்திரமே பங்களாதேஷ் பெற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் கூட பட்டியலில் ஐந்தாமிடத்துக்கே அதிகபட்சமாக அவ்வணி முன்னேற முடியும் என்ற நிலையிலேயே அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவ்வணி இழந்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 204/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகமதுல்லா 56 (70), லிட்டன் தாஸ் 45 (64), ஷகிப் அல் ஹஸன் 43 (64), மெஹிடி ஹஸன் மிராஸ் 25 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/23, மொஹமட் வாஸிம் 3/31, ஹரிஸ் றாஃப் 2/36, இஃப்திஹார் அஹ்மட் 1/44, உஸாமா மிர் 1/66)
பாகிஸ்தான்: 205/3 (32.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பக்கர் ஸமன் 81 (74), அப்துல்லாஹ் ஷஃபிக் 68 (69), மொஹமட் றிஸ்வான் ஆ.இ 26 (21), இஃப்திஹார் அஹ்மட் ஆ.இ 17 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 3/60)
போட்டியின் நாயகன்: பக்கர் ஸமன்
இந்நிலையில் மும்பையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவை இலங்கை எதிர்கொள்கிறது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago