2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, மழை காரணமாக 40 ஓவர்களாக சுருங்கிய தமது இனிங்ஸில் அணித்தலைவி லோரா வொல்வார்ட்டின் 90 (82), மரிஸனே கப்பின் ஆட்டமிழக்காத 68 (43), சுனு லுஸ்ஸின் 61 (59), நடினே டி கிளார்க்கின் 41 (16) ஓட்டங்களோடு 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது. நஷ்ரா சிந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 306 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் இனிங்ஸில் அயபொங்கா ககா, கப்பிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்களைப் பெற்றபோது மீண்டும் மழை குறுக்கிட்ட நிலையில் இறுதியில் 20 ஓவர்களில் 234 ஓட்டங்களாக வெற்றியிலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

நொன்டுமிஸோ ஷங்கஸேயிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களையே பெற்ற பாகிஸ்தான் 150 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகியாக கப் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .