2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் பப்புவா நியூ கினி

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகியன தகுதிபெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தத்தமது குழுக்களில் முதலிடங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகியன அடுத்தாண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன.

இந்நிலையில், தகுதிகாண் போட்டிகளின் குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மற்றைய உலகக் கிண்ண இடங்களுக்கான தகுதிப் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நமீபியா, ஓமான், ஸ்கொட்லாந்து, ஹொங் கொங் ஆகியன தமக்கிடையே போட்டியிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .