Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான, நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியாவின் குழாமில் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கான மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திலும் 26 வயதான டேவிட் இடம்பெற்றுள்ளார். இதில் டேவிட் வோர்னரின் பணிச்சுமை காரணமாக அவர் இடம்பெறாததுடன் அவருக்குப் பதிலாக கமரொன் கிறீன் இடம்பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் பிறந்த டேவிட், அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), கிளென் மக்ஸ்வெல், அடம் ஸாம்பா, டேவிட் வோர்னர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் மார்ஷ், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், ஜொஷ் இங்லிஸ் (விக்கெட் காப்பாளர்), டிம் டேவிட், ஜொஷ் ஹேசில்வூட், ஸ்டீவன் ஸ்மித், அஸ்தன் அகர், கேன் றிச்சர்ட்ஸன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025