2025 மே 21, புதன்கிழமை

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15  வீரர்கள் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது. 

இந்தத் தொடரில் இலங்கை அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லாமல் தகுதிச்சுற்று அடிப்படையில் செல்கிறது.

தகுதிச்சுற்றில் குழு-ஏ பிரிவில் நபியா, நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுடன் இலங்கை இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது  குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விவரம்:

டசுன் சானக (தலைவர்), தனஞ்சய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னான்டோ, சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மென்டிஸ், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, லஹிரு மதுசங்க, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், மகேஷ் தீக்சன, பிரவீன் ஜெயவிக்ரம.

மேலதிக வீரர்கள்: லஹிரு குமார, புலின தரங்க, பினுர பெர்னான்டோ, அகில தனஞ்சய.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X