Shanmugan Murugavel / 2022 நவம்பர் 22 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இரவு நடைபெற்ற செனகல் உடனான குழு ஏ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.
நெதர்லாந்து சார்பாக, கோடி கக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இன்று அதிகாலை நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கும், வேல்ஸுக்குமிடையிலான குழு பி போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. அமெரிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை திமோதி வெயா பெற்றிருந்ததோடு, வேல்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரெத் பேல் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஈரானுடனான குழு பி போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, புகாயோ ஸாகா இரண்டு கோல்களையும், ஜூட் பெல்லிங்ஹாம், ரஹீம் ஸ்டேர்லிங்க், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், ஜக் கிரெலிஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஈரான் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மெஹ்டி தரெமி பெற்றிருந்தார்.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026