Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 01 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு உருகுவே தகுதிபெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற இறுதி 16 அணிகளுக்கான விலகல் முறையிலான சுற்றுப் போட்டியொன்றில் போர்த்துக்கல்லை வென்றமையையடுத்தே காலிறுதிப் போட்டிக்கு உருகுவே தகுதிபெற்றது.
இப்போட்டியின் ஆரம்பத்திலேயே சக முன்கள வீரர் லூயிஸ் சுவாரஸுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு முன்னநகர்ந்து வந்த உருகுவேயின் முன்கள வீரரான எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸிடமிருந்து வந்த உதையை, போட்டியின் ஏழாவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
இதன்பின்னர், இப்போட்டியின் பெரும்பாலான நேரங்களில் பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்து முன்னநகர்ந்து சென்றபோதும், உருகுவே அணியின் தலைவர் டியகோ கொடின், ஜொஸே கிம்மேனிஸ் உள்ளிட்டவர்களைக் கொண்ட உருகுவேயின் பின்களத்தை தகர்க்க போர்த்துக்கல்லால் முடிந்திருக்கவில்லை.
போர்த்துக்கல்லின் நட்சத்திர முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, ஏறத்தாழ போட்டியின் முழுநேரமும் டியகோ கொடின் பின்தொடர்ந்தவாறு இருந்ததுடன், அவருக்கு எந்தவிதத்திலும் பந்துகள் வருவதை உருகுவே தடுத்திருந்தது.
எவ்வாறெனினும், போட்டியின் 55ஆவது நிமிடத்தில், உருகுவே வீரர்களால் கவனிக்கப்படாமலிருந்த போர்த்துக்கல்லின் பின்கள வீரரான பெப்பே மேலெழுந்து தலையால் முட்டி கோலொன்றைப் பெற்று கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
எனினும் அடுத்த ஏழாவது நிமிடத்தில், பெப்பே தலையால் முட்டிய பந்தொன்று பின்புறமாக செல்ல, அதைக் கைப்பற்றிக் கொண்ட உருகுவே எடின்சன் கவானியின் மூலம் பெற்ற கோலுடன் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இவ்வாறாக, குறித்த போட்டியின் நாயகனாக விளங்கிய எடின்சன் கவானி உபாதை காரணமாக போட்டியின் பிற்பகுதியில் மாற்று வீரரொருவரால் பிரதியீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்குள் காலிறுதிப் போட்டியை உருகுவே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற மற்றொரு இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வென்ற பிரான்ஸ் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. பிரான்ஸ் சார்பாக, கிலியான் மப்பே இரண்டு கோல்களையும் அன்டோனி கிறீஸ்மன், பெஞ்சமின் பவார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றிருந்தனர். ஆர்ஜென்டீனா சார்பாக அஞ்சல் டி மரியா, கப்ரியல் மெர்காடோ, அஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
45 minute ago
48 minute ago