2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எஞ்சிய தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் தனஞ்சய டி சில்வா இல்லை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான எஞ்சிய சுற்றுப்பயணத்திலிருந்து இடதுகால் தொடையில் கிழிவு காரணமாக இலங்கையின் துடுப்பாட்டவீரர் தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் நேற்றைய ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் நேற்று முன்தின முதல் நாளில் 79 ஓட்டங்களைப் பெற்றபோது களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

குறித்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 3 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய வண்ணமிருந்தபோது தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால் பெற்ற 85 ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை கட்டியெழிப்பியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .