Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ஏய்டன் மர்க்ரம் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 111 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை மர்க்ரம் அடைந்துள்ளார். இதுதவிர, இப்போட்டியில் 112 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் ஹஷிம் அம்லா, 13ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
மேற்குறித்தவை தவிர, முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் எவ்விதமாற்றமும் இல்லாத நிலையில் அத்தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடித்ததன் மூலம் நியூசிலாந்து, இங்கிலாந்தை பின்தள்ளி அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்தை தென்னாபிரிக்கா பெற்றுள்ளது.
இதேவேளை, ஆறாமிடத்திலிருந்த பாகிஸ்தான் ஓரிடம் சரிந்து ஏழாமிடத்தைப் பெற்றுள்ளது.
அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
20 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
06 Apr 2026