2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘எந்தத் தேர்வாளரும் எனக்குக் கூறவில்லை’

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரே, தனது இறுதித் தொடர் என எந்தத் தேர்வாளரும் தனக்குக் கூறவில்லையென, இந்திய அணியின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில்,  இடம்பெற்ற நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியுடன் நெஹ்ரா ஓய்வு பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரைத் தாண்டி நியூசிலாந்து கருத்திற் கொள்ளப்பட மாட்டார் என தேர்வாளர்கள் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நெஹ்ரா, 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 120 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 157 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 27 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X