Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வென்றமை தனதடைவுகளில் மிகப்பெரிய அடைவு என்றவாறான கருத்துகளை இந்திய அணியின் தலைவர் விராத் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.
போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை நேற்றுப் பெற்றுக்கொள்ளும்போது மேலும் கருத்துத் தெரிவித்த கோலி, “2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நாங்கள் வெல்லும்போது அணியின் இளம் அங்கத்தவராக நான் இருந்தேன். என்னைச் சூழவுள்ள நபர்கள் உணர்ச்சிவசப்படுவதை நான் பார்த்தேன். ஆனால், அவர்கள் என்ன உணருகிறார்கள் என்பதை நான் உணரவில்லை. இந்த நாட்டில் (அவுஸ்திரேலியாவில்) மூன்றாவது தடவையாக தற்போதிருக்கின்றநிலையிலும் நாங்கள் தற்போது அடைந்திருப்பது முன்னெரெப்போதும் அடையப்படாததென புரிந்து கொள்ளும்போது நாங்கள் இதனால் பெருமையடைய முடியும். இந்த வெற்றியானது, இந்திய அணியொன்றாக எங்களுக்கு புதிய அடையாளமொன்றை வழங்கியுள்ளது.
[இந்திய கிரிக்கெட்டுக்கு] இந்திய வெற்றியானது நிச்சயமாக ஒரு படிக்கல். இந்த அணியின் சராசரி வயதை நீங்கள் நோக்குவீர்களானால் அது மிகவும் குறைவாக உள்ளது. மிக முக்கியமான விடயம் என்னவெனில் நாங்கள் நம்புகிறோம். [நாங்கள் தோற்றபோதும்] தென்னாபிரிக்கா, இங்கிலாந்தும் நாங்கள் நம்பினோம். நாங்கள் சரியான பாதையிலுள்ளோம். நாங்கள் இப்போது முடிவுகளைக் கொண்டுள்ளோம்.
அவர் இறுதியாக இங்கு வரும்போது கொண்டிருந்த தொடரைத் தொடர்ந்து [செட்டேஸ்வர்] புஜாராவுக்கு சிறப்புக் குறிப்பொன்று. இத்தொடரில் அவர் அதிசிறப்பாக இருந்தார். சூழவுள்ள மிகவும் நல்ல நபர்களில் அவருமொருவர் அவருக்காக நான் மகிழ்வடைகிறேன். இதுதவிர, மாயங்க் அகர்வாலுக்கும் சிறப்புக் குறிப்பொன்று. அவர் வந்து சம்பியனொருவர் போலத் துடுப்பெடுத்தாடினார். துடுப்பாட்டப் பிரிவொன்றாக ஒவ்வொருவரும் வெவ்வேறு தருணங்களில் பங்களித்தார்கள். றிஷப் [பண்ட்] வந்து பந்துவீச்சு வரிசைகளை ஆதிக்கல் செலுத்தியது சிறப்பாக இருந்தது.
இங்கு மட்டுமல்லாமல், முந்தைய இரண்டு சுற்றுப்பயணங்களிலும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது அதிசிறப்பானது. நான்கு பந்துவீச்சாளர்கள் விளையாடி, வெளிநாட்டு மண்ணில் இந்த மாதிரியான முடிவுகளைப் பெறுவதை இந்திய கிரிக்கெட்டில் நான் காணவில்லை. அவர்களின் உடற்றகுதிக்கும் மனோதிடத்துக்கும் பாராட்டுகள்” என்றார்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025