Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் இரண்டாவது பருவகாலத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலை அணியை ஆறாவது அணியாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தொடரின் பணிப்பாளர் றவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டாவது பருவகாலமானது அடுத்தாண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறும் என றவின் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, ஒவ்வொரு அணியும் கட்டாயம் கிறிஸ் கெய்ல், பப் டு பிளெஸி, ஏ.பி டி. வில்லியர்ஸ் போன்ற இரண்டு நட்சத்திர வீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் விக்ரமரத்ன மேலும் கூறியுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago