Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 24 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்) எதிர்வரும் ஆண்டுகளில் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்திய அணி இடம்பெறும் என தொடரின் பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு எல்.பி.எல்லில் யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை என வடக்கு, மத்தி, தெற்கு, மேல் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணிகள் காணப்படுகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இல்லாமல் ஏன் கண்டிக்கு 20 கிலோ மீற்றரிலுள்ள தம்புள்ளையின் பெயரில் அணி காணப்படுகின்றது எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அந்தவகையில், இதற்குப் பதிலளிக்கும்போதே ஆரம்பத்தில் தொடர் சர்வதேச மைதானங்களான ஹம்பந்தோட்டை, தம்புள்ளை, கண்டியில் நடாத்த திட்டமிட்டதாலேயே அவற்றின் பெயரில் அணிகள் தெரிவுசெய்யப்பட்டதாகவும், யாழ்ப்பாண அணி இடம்பெற வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை உறுதியாயிருந்ததாய் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்தாண்டு அல்லது மூன்றாண்டில் கிழக்கு மாகாண அணியும் இடம்பெறுமெனவும் அணிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரவின் விக்ரமரத்ன மேலும் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago