2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: கோல் கிளாடியேட்டர்ஸை வென்ற கொழும்பு ஸ்டார்ஸ்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்டார்ஸின் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், அணித்தலைவர் குசல் மென்டிஸின் 72 (49), அசாட் ஷஃபிக்கின் 58 (33), தனுக டப்ரேயின் 33 (22), லஹிரு உதாரவின் 24 (14) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சீக்குகே பிரசனால் 3-0-22-1, கசுன் ராஜித 4-0-32-1, நவீன்-உல்-ஹக் 4-0-33-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 194 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ், தினேஷ் சந்திமாலின் 63 (33), சரித் அஸலங்கவின் 46 (38), ரவி பொப்பாராவின் ஆட்டமிழக்காத 31 (12), பெனி ஹொவெல்லின் 22 (09), பிரசன்னாவின் 14 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக பொப்பாரா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .