Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்), நாயகனாக ஜஃப்னா ஸ்டாலியன்ஸின் வனிடு ஹஸரங்க தெரிவாகியுள்ளார்.
தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸரங்க 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் முதலிடத்தில் இருப்பதோடு, தொடரில் சிறந்த கட்டுக்கோப்பாக ஓவருக்கு 5.18 ஓட்டங்கள் என்ற வகையிலேயே விட்டுக் கொடுத்து அதிலும் முதலிடத்தில் காணப்படுகிறார்.
இனிங்ஸின் நடுப்பகுதியில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய யாழ்ப்பாணத்தின் துருப்புச்சீட்டாக ஹஸரங்க காணப்பட்டிருந்தார்.
ஹஸரங்கவையடுத்து கோல் கிளாடியேட்டர்ஸின் தனஞ்சய லக்ஷன், எட்டுப் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், கொழும்பு கிங்ஸின் குவைஸ் அஹ்மட் ஒன்பது போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதுடன், காலியின் சந்தகனும் எட்டுப் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை, ஹஸரங்க இனிங்ஸின் இறுதிப் பகுதிகளில் வேகமாக ஓட்டங்களையும் பெற்றிருந்தார். 10 போட்டிகளில், 100 பந்துகளுக்கு 160.75 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 127 ஓட்டங்களையும் ஹஸரங்க பெற்றிருந்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago