Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 01 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்) கண்டி டஸ்கர்ஸுக்காக விளையாடுவதற்காக ஒப்பந்தமொன்றில் இந்தியாவின் முன்னாள் சகலதுறைவீரர் இர்பான் பதான் கைச்சாத்திட்டுள்ளார்.
ஒப்பந்தத்தில் பதான் கையொப்பமிட்டதை அவரும், கண்டியின் பயிற்சியாளர் ஹஷான் திலகரட்ணவும் உறுதிப்படுத்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லியம் பிளங்கெட், பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் றியாஸ், இலங்கையின் துடுப்பாட்டவீரர் குசல் பெரேரா ஆகியோருடன் கண்டி அணியில் பதான் இணைகின்றார்.
கடந்தாண்டு பெப்ரவரி மாதத்துக்கு பின்னர் இருபதுக்கு – 20 போட்டியில் விளையாடியிருக்காத 36 வயதான பதான், தொண்டுத் தொடரொன்றில் இந்தியா லெஜன்ட்ஸ் அணிக்காக மாத்திரம் பின்னர் விளையாடியிருந்தார்.
ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் கூட வெளிநாட்டுத் தொடர்களில் பொதுவாக விளையாடியிருக்காத நிலையில், எல்.பி.எல்லில் கொழும்பு அணியில் வேகப்பந்துவீச்சாளர் மன்பிறீட் கோனியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .