Shanmugan Murugavel / 2026 ஜனவரி 19 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அஸ்தன் வில்லா தோற்றது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை தியர்னோ பரி பெற்றிருந்தார்.
இதேவேளை வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், நியூகாசில் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. மன்செஸ்டர் சிற்றியும், வில்லாவும் தலா 43 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் முறையே இரண்டாம், மூன்றாமிடங்களில் காணப்படுகின்றன. 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் காணப்படுகின்றது.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago