Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, பில் பொடென், றியாட் மஹ்ரேஸ், பெர்னார்டோ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிச்சர்லிஸன் பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தில் 56 புள்ளிகளுடன் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும், லெய்செஸ்டர் சிற்றியும் தலா 46 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்தில் யுனைட்டெட்டும், மூன்றாமிடத்தில் லெய்செஸ்டரும் காணப்படுகின்றன. இதேபோல செல்சியும், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டும் தலா 42 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், கோலெண்ணிக்கை அடிப்படையில் செல்சி நான்காமிடத்திலும், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
2 hours ago
4 hours ago