Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில், ஏ.சி மிலனை ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கொன்ஸலோ ஹியூகைன் பெற்றிருந்தார். இப்போட்டியில் முதலாவது கோலைப் பெறும்போது, சீரி ஏ தொடரில் தனது 100ஆவது கோலை கொன்ஸலோ ஹியூகைன் பதிவுசெய்திருந்தார்.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜுவென்டஸ், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
19 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
06 Apr 2026