Editorial / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியொன்றில், ஏ.சி மிலனை, 4-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் மூன்று கோல்களைப் பெற்றதோடு, லூயிஸ் அல்பேர்ட்டோ ஒரு கோலைப் பெற்றார். ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ மொன்டொலிவோ பெற்றார்.
இத்தாலியத் தலைநகர் றோமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இப்போட்டியானது ஒரு மணித்தியாலம் தாமதித்திருந்தது.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற வேறொரு போட்டியில், பொலொக்னாவை, 3-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago