Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் மூன்றாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ்வை எதிர்கொண்ட சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மெட்வெடெவ், 7-6 (8-6), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் சீனாவின் வாங் குவாங்கை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-1, 6-0 என்ற நேர் செட்களில் இலகுவாக 44 நிமிடங்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
45 minute ago
1 hours ago