Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், தற்போதைய இரண்டாம்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியிடம் தனது முதலிடத்தை நயோமி ஒஸாகா பறிகொடுக்கவுள்ளார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-3, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ஸ்மானை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-3, 2-6, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
35 minute ago
42 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
46 minute ago
1 hours ago