2026 மே 21, வியாழக்கிழமை

dd

ஐ.பி.எல்லுக்கு இவ்வாரயிறுதியில் திரும்பும் ஸோல்ட்

Shanmugan Murugavel   / 2026 மே 21 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரல் காயமொன்று காரணமாக இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) விலகியிருந்த நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பில் ஸோல்ட், ஒரு மாதத்தின் பின்னர் இவ்வாரயிறுதியில் இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிராக ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் எல்லைக் கோட்டுக்குச் சென்ற பந்தை தடுக்கப் பாய்ந்தபோது தனது இடதுகையிலுள்ள விரலொன்றை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காத ஸோல்ட், விரல் குணமடைகையில் தனது இளம் குடும்படுத்துடன் நேரத்தைச் செலவளிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார்.

ஸோல்டுக்குப் பதிலாக இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தெல் களமிறங்கியபோதும் அவர் தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X