2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: அதிக ஓட்டங்கள் பெற்றவராக சுதர்சன்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 04 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டுத் தொடரின் அதிக ஓட்டங்கள் பெற்றவராக குஜராத் டைட்டான்ஸின் சாய் சுதர்சன் தெரிவானார்.

இத்தொடரின் சிறந்த வளர்ந்து வரும் வீரராகவும் தெரிவான சுதர்சன், 100 பந்துகளில் 156.17 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 759 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இரண்டாமிடத்தில் 100 பந்துகளில் 167.91 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 717 ஓட்டங்களைப் பெற்ற மும்பை இந்தியன்ஸின் சூரியகுமார் யாதவ் இத்தொடரின் மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராகத் தெரிவானார்.

மூன்றாமிடத்தில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலி, 100 பந்துகளில் 144.71 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 657 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .