2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: ஆர்.சி.பி பயிற்சியாளராக பங்கர்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 10 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, அடுத்த இரண்டு பருவகாலங்களுக்கு இந்தியாவின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பெயரிடப்பட்டுள்ளார்.

துடுப்பாட்ட ஆலோசகராக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடன் இவ்வாண்டு இணைந்த பங்கர், மைக் ஹெஸனைப் பிரதியிடுகிறார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இவ்வாண்டு ஐ.பி.எல் பகுதிக்கு முன்பதாக சைமன் ஹட்டிச் பதவி விலகிய நிலையிலேயே அவரை ஹெஸன் பிரதியிட்டிருந்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் நடவடிக்கைகள் பணிப்பாளராக ஹெஸன் தொடரவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .