2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

ஐ.பி.எல் ஏலம் 2026: 18 கோடிக்கு ஏலம் போன பத்திரண

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் வாங்கியிருந்தது.

இதேவேளை பதும் நிஸங்கவை 4 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் வாங்கியிருந்தது.

இந்நிலையில் புதுமுகவீரர்களான இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான விக்கெட் காப்பாளர் கார்த்திக் ஷர்மா, 20 வயதான இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பிரஷாந்த் வீரை தலா 14.2 கோடி இந்திய ரூபாய்களைக் கொடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியிருந்தது. இன்னொரு இந்திய புதுமுக வேகப்பந்துவீச்சாளரான ஆகிப் நபியை 8.4 கோடி இந்திய ரூபாய்களுக்கு கப்பிட்டல்ஸ் வாங்கியதுடன், 5.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான மன்கெஷ் யாதவ்வை றோயல் சலஞ்சர்ஸும் வாங்கியிருந்தது.

இதுதவிர 9.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு முஸ்தபிசூர் ரஹ்மானை நைட் றைடர்ஸ் வாங்கியிருந்ததுடன் 13 கோடி இந்திய ரூபாய்களுக்கு இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டனை சண்றைசர்ஸ் ஹைதரபாத் வாங்கியிருந்ததுடன், 8.6 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஜொஷ் இங்லிஸை லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வாங்கியிருந்தது.

இதேவேளை 5.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு ராகுல் சஹரையும், தலா 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு நியூசிலாந்தின் மற் ஹென்றியையும், மேற்கிந்தியத் தீவுகளின் அகீல் ஹொஸைனையும் சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மத்தியூ ஷோர்ட்டையும் 1.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் வாங்கியிருந்தது.

இந்நிலையில் 7 கோடி இந்திய ரூபாய்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் ஜேஸன் ஹோல்டரை குஜராத் டைட்டன்ஸ் வாங்கியிருந்ததுடன், 7.2 கோடி இந்திய ரூபாய்களுக்கு ரவி பிஷ்னோயை ராஜஸ்தான் றோயல்ஸ் வாங்கியிருந்தது.

இதுதவிர நியூசிலாந்தின் ஜேக்கப் டபியை பெங்களூரும், தென்னாபிரிக்காவின் அன்றிச் நொர்கியாவை லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும், நியூசிலாந்தின் கைல் ஜேமிஸனை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிடல்ஸ் கைச்சாத்திட்டிருந்தன.

 நியூசிலாந்தின் நைட் றைடர்ஸும் 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கியிருந்தன.

இந்நிலையில் 4.4 கோடி இந்திய ரூபாய்களுக்கு அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர் கூப்பர் கொனோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பென் டுவார்ஷுஸ்ஸை பஞ்சாப் கிங்ஸும், 75 இலட்சங்கள் இந்திய ரூபாய்களுக்கு சஃப்ராஸ் கானை சென்னை சுப்பர் கிங்ஸும் வாங்கியிருந்தன.

இது தவிர நியூசிலாந்தின் பின் அலென், றஷின் றவீந்திரவை தலா 2, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் டீபை 1 கோடி இந்திய ரூபாய்களுக்கு நைட் றைடர்ஸ் வாங்கிருந்தது.

இதேவேளை நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட்டை 1.5 கோடி, ராகுல் ட்ரிபாதியை 75 இலட்சங்கள் இந்திய ரூபாய்களுக்கு நைட் றைடர்ஸ் வாங்கியிருந்தது.

இந்நிலையில் 75 இலட்சங்கள் இந்திய ரூபாய்களுக்கு இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜோர்டான் கொக்ஸை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு கைச்சாத்திடதுடன், தென்னாபிரிக்காவின் லுங்கி என்கிடியை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் கைச்சாத்திடிருந்தது. பிறித்திவி ஷாவை 75 இலட்சங்கள் இந்திய ரூபாய்க்கு கப்பிட்டல்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.

தவிர நியூசிலாந்தின் அடம் மில்னை 2.4 கோடி இந்திய ரூபாய்களுக்கு ராஜஸ்தான் றோயல்ஸும், இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் டொம் பன்டனை 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு குஜராத் டைட்டான்ஸும், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸகரி போக்ஸை 75 இலட்சங்கள் இந்திய ரூபாய்களுக்கு சுப்பர் கிங்ஸும் வாங்கியிருந்தன.

இதேவேளை மகேஷ் தீக்‌ஷன, தசுன் ஷானக, ஜொனி பெயார்ஸ்டோ, ஜேமி ஸ்மித், ஸ்பென்சன் ஜோன்சன், மிஷெல் பிறேஸ்வெல், ஜேக் பிறேஸர் மக்குர்க், ஜஹை றிச்சர்ட்சன், அல்ஸாரி ஜோசப், டரைல் மிற்செல், கரண் ஷர்மா, விஜயர் ஷங்கர், மஹிபால் லொம்ரோர், முஜீப் உர் ரஹ்மான், பஸல்ஹக் பரூக்கி, ரஹ்மனுல்லா குர்பாஸ், டெவொன் கொன்வே, ஆகாஷ் மத்வால் ஆகியோர் ஏலமெடுக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X