2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற பெங்களூரு

Shanmugan Murugavel   / 2024 மே 05 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூருவின் அணித்தலைவர் பப் டு பிளெஸி, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஆரம்பத்திலேயே ரித்திமான் சஹா, அணித்தலைவர் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷனை மொஹமட் சிராஜ் (2), கமரன் கிறீனிடம் பறிகொடுத்தது. அந்தைத் தொடர்ந்து ஷாருக் கானும், டேவிட் மில்லரும் ஓட்டங்களைச் சேகரித்த நிலையில், மில்லர் 30 (20), ஷாருக் கான் 37 (24) ஓட்டங்களுடன் கரண் ஷர்மா, ரண் அவுட் முறேஐயில் வீழ்ந்தனர்.

இதன் பின்னர் ராகுல் டெவாட்டியாவும், ரஷீட் கானும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 18 (14), 35 (21) ஓட்டங்களுடன் ரஷீட் கானும், டெவாட்டியாவும் யஷ் தயாலிடம் வீழ்ந்தனர். சுதர்ஷனுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய விஜய் ஷங்கர் 10 (07) ஓட்டங்களுடன் இறுதி ஓவரின் விஜயகுமார் வியாஸ்கின் இரண்டு விக்கெட்டுகளில் ஒன்றாக விழ 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை குஜராத் பெற்றது.

பதிலுக்கு 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, டு பிளெஸியின் 64 (23), விராட் கோலியின் 42 (27) ஓட்டங்கள் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் ஜொஷ் லிட்டில் (4), நூர் அஹ்மட்டிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

எனினும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 21 (12), ஸ்வப்னில் சிங்கின் ஆட்டமிழக்காத 15 (09) ஓட்டங்களோடு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சிராஜ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .