Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 12 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா தகுதி பெற்றது.
இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 18 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்திலுள்ள டெல்லி கப்பிட்டல்ஸ் 12 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக 16 புள்ளிகளையே பெற முடியுமென்ற நிலையில், முதல் நான்கு இடங்களை விட கொல்கத்தா கீழிறங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, மழை காரணமாக 16 ஓவர்களைக் கொண்டதான இனிங்ஸொன்றைக் கொண்ட போட்டியில் பில் ஸோல்ட், சுனில் நரைன் ஆகியோரை நுவான் துஷார, ஜஸ்பிரிட் பும்ராவிடம் இழந்தது. அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், அன்ஷுல் கம்போஜ்ஜிடம் வீழ்ந்தார். பின்னர் 42 (21) ஓட்டங்களுடன் வெங்கடேஷும் பியூஸ் சாவ்லாவிடம் வீழ்ந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ரானா 33 (23) ஓட்டங்களுடன் ரண் அவுட்டானதுடன், அன்ட்ரே ரஸல் 24 (14) ஓட்டங்களுடன் சாவ்லாவிடம் வீழ்ந்தார். பின்னர் ரிங்கு சிங் 20 (12) ஓட்டங்களுடன் பும்ராவிடம் விழ, ரமன்டீப் சிங்கின் ஆட்டமிழக்காத 17 (08) ஓட்டங்களுடன் 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 158 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை இஷன் கிஷன் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும் கிஷனை 40 (22) ஓட்டங்களுடன் நரைனிடம் இழந்ததுடன், அடுத்த ஓவரிலேயே துஷாரவுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய றோஹித் ஷர்மாவை வருண் சக்கரவர்த்தியிடம் இழந்தது.
அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் ரஸலிடமும், பாண்டியா வருணிடமும், டிம் டேவிட் ரஸலிடமும் வீழ்ந்தனர். பின்னர் நாமன் திர் 17 (06), திலக் வர்மா 32 (17) ஓட்டங்களுடன் ஹர்ஷித் ரானாவிடம் வீழ்ந்த நிலையில் 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 139 ஓட்டங்களையே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக வருண் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
26 minute ago
33 minute ago