2024 மே 13, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்றிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ ஆரம்பத்திலேயே குயின்டன் டி கொக், மார்க்கஸ் ஸ்டொய்னிஸை ட்ரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மாவிடம் இழந்தது.

பின்னர் அணித்தலைவர் லோகேஷ் ராகுலும், தீபக் ஹூடாவும் ஓட்டங்களை வேகமாகச் சேர்த்த நிலையில் 50 (31) ஓட்டங்களுடன் ஹூடா இரவிச்சந்திரன் அஷ்வினிடம் வீழ்ந்ததோடு குறிப்பிட்ட இடைவெளிகளில் அடுத்து வந்த நிக்கலஸ் பூரான் மற்றும் 76 (48) ஓட்டங்களைப் பெற்ற ராகுல் ஆகியோர் சந்தீப் ஷர்மா, ஆவேஷ் கானிடம் விழ 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை லக்னோ பெற்றது.

பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ஜொஸ் பட்லர், யஷஸ்வி ஜைஸ்வால் மூலம் வேகமாக ஆரம்பித்தபோதும் 34 (18) ஓட்டங்களுடன் பட்லரையும், 24 (18) ஓட்டங்களுடன் ஜைஸ்வாலையும் யஷ் தக்கூர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸிடம் அடுத்தடுத்த ஓவர்களில் இழந்ததுடன், குறிப்பிட்ட நேரத்திலேயே யுஸ்வேந்திர சஹாலுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்று வீரராகக் களமிறங்கிய ரியான் பராக்கை 14 (11) ஓட்டங்களுடன் அமித் மிஷ்ராவிடம் இழந்தது.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த சாம்சனின் ஆட்டமிழக்காத 71 (33), துருவ் ஜுரேலின் ஆட்டமிழக்காத 52 (34) ஓட்டங்களோடு 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 19 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சாம்சன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X