Editorial / 2018 மார்ச் 29 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 11 ஆவது ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் தொடரிலிருந்து விலகியதையடுத்து அவருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசசஸ் ஹைதராபாத் நிர்வாகம் இது குறித்து கூறுகையில்,
“ஆம்! நாம் டேவிட் வோர்ணருக்கு பதிலாக இலங்கை அணியின் குசல் பெரேராவை அணியில் விளையாடுமாறு அழைத்துள்ளோம். குசல் பெரேரா, டேவிட் வோர்ணரை போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர். கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார். இதனால் நாம் அவரை தெரிவுசெய்தோம். எனினும் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
எனினும் குசல் பெரேரா இலங்கையில் 4 மாகாணங்களுக்கிடையில் நடைபெறவுள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராகி வருகின்ற நிலையில், இவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதானது இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் குசல் பெரேரா இணைந்து எடுக்கும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
54 minute ago