Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையால் இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 335 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, 17ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை வோணர் அடைந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த போட்டியில் 36 ஓட்டங்களையே அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பெற்றிருந்த நிலையில், அவர் முதலாமிடத்திலிருந்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்க, இரண்டாமிடத்திலிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 226 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 162 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன், 14ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
17 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
48 minute ago
1 hours ago