2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஒ.நா.ச.போ தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்

சர்வதேசப் போட்டித் தொடரானது, மொஹாலியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெறும் இத்தொடரானது இரண்டு அணிகளும் தமது இறுதிப் பதினொருவர் அணியை இறுதிப்படுத்திக் கொள்ள உதவும்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் இரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோரைப் பரீட்சிப்பதுக்கான சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது. அக்ஸர் பட்டேல் உபாதையிலிருந்து குணமடையத் தவறினால் அஷ்வினா அல்லது சுந்தரா என்ற தெளிவை வழங்குகின்றது.

தவிர ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வரும் சூரியகுமார் யாதவ்வை சஞ்சு சாம்ஸனுக்குமுன்னர் தெரிவு செய்ததை இத்தொடரிலாவது நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தனது உடற்றகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளார்.

மறுபக்கமாக அவுஸ்திரேலியாவில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் அணித்தலைவர் பற் கமின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மக்ஸ்வெல், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தமது உடற்றகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X