2025 மே 01, வியாழக்கிழமை

ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை தகுதி பெறாத நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரானது அவ்வணிக்கு முக்கியத்துவமில்லாவிட்டாலும் அவுஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவமிக்கதாய் அமைகின்றது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறும் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக அமையுமென்ற நிலையில் அதற்கு தம்மைப் பழக்கிக் கொள்வதற்கு அவுஸ்திரேலியாவுக்கு இப்போட்டிகள் நிச்சயம் உதவும்.

தன்னை நிரூபிக்க ஜேக் பிறேஸர்-மக்குர்க்குக்கு சிறந்த வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .